ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி மாட்டி கொண்ட சீமான்! மண்டியிடாமல் வழக்கை எதிர்கொள்வாரா?

ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி மாட்டி கொண்ட சீமான்! மண்டியிடாமல் வழக்கை எதிர்கொள்வாரா?

Update: 2019-10-14 07:42 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை பாராட்டியதன் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார். இதனால் இவர் மீது விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் இரண்டு பிரிவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்ரவண்டி சட்டமன்றத் தொகுதியில் கட்சி வேட்பாளர் கே.கந்தசாமிக்கு ஆதரவாக பேசிய சீமான், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கையில் அமைதி படையை அனுப்பி தமிழர்களை கொன்றார் என்றும், அதனால் அவர் தங்களால் கொலை செய்யப்பட்டு அவரது மண்ணிலே புதைக்கப்பட்டார் என்று சர்ச்சை பேச்சை பேசினார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.


முன்னாள் பிரதமரை தமிழ் இனத்தின் எதிரி என்று கூறி, தமிழ் மண்ணில் ராஜீவ் காந்தியின் மரணம் வரலாற்று புத்தகங்களில் மகிமைப்படுத்தப்படும் என்று பரிந்துரைத்தார்.


இதனால் காங்கிரஸ் சார்பில் சீமான் மீது தேச தலைவரை அவதூறாக பேசியதற்காகவும், பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகமிடம் தேச விரோதமாக சீமான் பேசியதற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு கூறினார்.


பா.ஜ.க தலைவர் SG சூர்யா சீமானுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/SuryahSG/status/1183651202145251328?s=20

Similar News