இனி மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் - ரெப்போ வட்டி விகிதத்தில் செய்யப்பட்ட மாற்றம்!

இனி மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் - ரெப்போ வட்டி விகிதத்தில் செய்யப்பட்ட மாற்றம்!

Update: 2019-08-07 08:02 GMT

வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும் வகையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகியக் கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று (புதன்கிழமை) குறைத்துள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கி 2019-2020-ம் ஆண்டுக்கான தனது 3-வது நிதிக் கொள்கையை இன்று அறிவித்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெற்ற நிதி கொள்கைக்குழுவின் 3 நாள் கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது.


கடந்த 6 மாதங்களில் ரெப்போ எனப்படும்
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து 4-வது முறையாகக்
குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள்
பெறும் கடன்களுக்கான வட்டியை 0.35% குறைத்தது ரிசர்வ் வங்கி. இதனால் 5.75
சதவீதத்தில் இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.


இதன் அடிப்படையில், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொழில்முனைவோர், சிறு தொழில்புரிவோர், வீடு, வாகனங்கள் வாங்குவோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைக்கும்.





Similar News