செங்கோட்டையில் : ஒலிம்பிக் வீரர்களுக்கு கைத்தட்டி பாராட்டு !

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் !

Update: 2021-08-15 03:55 GMT

புதுடில்லி: நாடு முழுவதும் இன்று (ஆக.15) சுதந்திரதின 75 வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி. தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். முன்னதாக ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

உரையை துவக்கிய பிரதமர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு கைத்தட்டி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து விழாவில் பங்கறே்றவர்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் கோவிட் போராளிகள் , தடுப்பூசி தயாரித்தவர்களுக்கும் அவர் நன்றி கூறினார்.

Image Source : DNA India.

Dinamaalar

Tags:    

Similar News