'சங்கத்தமிழன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
'சங்கத்தமிழன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
'மக்கள் செல்வன் ' விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் சங்கத்தமிழன்.இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ளார். இந்தப் படம் பி.பாரதி ரெட்டிக்கு 6 வது படமாகும்.
விஜய்சேதுபதி ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பினை பிரவீன் K.L செய்துள்ளார் .
நவம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது .