பிளாஸ்டிக் கொடுத்தால் அரிசி இலவசம். பிளாஸ்டிக் இல்லாத கிராமங்களை உருவாக்க மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.!
பிளாஸ்டிக் கொடுத்தால் அரிசி இலவசம். பிளாஸ்டிக் இல்லாத கிராமங்களை உருவாக்க மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.!
தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் நாராயண ரெட்டி இவர் அங்கு இருக்கும் கிராமங்களை தூய்மையான பிளாஸ்டிக் இல்லாத கிராமத்தை உருவாக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றுள்ளார். இதன் முதற் கட்டமாக அங்கு இருக்கும் பள்ளி மாணவர்களிடையே ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தார்
"ஒரு மணி நேரத்திற்குள் அந்த பகுதியில் அதிக எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பவருக்கு கிரிக்கெட் கிட் பரிசு என சொல்லி போட்டியை ஆரம்பித்தார் மாவட்ட ஆட்சியர்
ஒரு மணி நேரத்தில், மாணவர்கள் அந்த கிராமத்திலிருந்து சுமார் 1,000 பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்தனர். இது போன்ற ஒரு சிறிய கிராமம் கூட இவ்வளவு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்க முடியும் என்பதைக் கண்டு மாவட்ட ஆட்சியரும் மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கடுத்து மாவட்ட ஆட்சியர் சி நாராயண ரெட்டி மாணவர்களிடையே நடத்திய போட்டியை போன்று அந்த மாவட்டத்தில் உள்ள 174 கிராமங்களில் இதேபோன்ற போட்டிகளை நடத்த தயாரானார்.
1 கிலோ பிளாஸ்டிக்கிற்கு 1 கிலோ அரிசி
தனியார் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் “கிராமங்களில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே இந்த எல்லா கிராமங்களுடனும் தொடர்புகொண்டு, அவர்கள் எங்களிடம் வழங்கக்கூடிய ஒவ்வொரு 1 கிலோ பிளாஸ்டிக்கிற்கும் 1 கிலோ அரிசியைக் கொடுப்போம் என்று கிராமத்தினரிடம் வாக்குறுதி அளித்தோம்
அரிசி என்பது கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு என்றும் தேவைப்படும் ஒன்று. எனவே, இது கிராமத்தை சுத்தமாக வைத்திருக்க இந்த திட்டம் மக்களை ஊக்குவிக்கும் என நாங்கள் நினைத்தோம்,