மோடி அரசின் ஆதரவால் சுணக்கத்தை எதிர் கொண்டு எழுச்சி நடைபோடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் !! முதலீடுகள் ஈர்ப்பில் ஒரே ஆண்டில் 43 சதவீத வளர்ச்சி!!
மோடி அரசின் ஆதரவால் சுணக்கத்தை எதிர் கொண்டு எழுச்சி நடைபோடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் !! முதலீடுகள் ஈர்ப்பில் ஒரே ஆண்டில் 43 சதவீத வளர்ச்சி!!
இந்தியா உட்பட உலகம் முழுவதும் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர உயர் விலை பண்டங்களின் மீதான நுகர்வோர் தேவை குறைந்ததை அடுத்து அதன் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்திலும் தற்காலிகமாக சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் பல பொருள்களுக்கான தேவை குறைந்துள்ளதால் குறுகிய கால அளவிலான ‘சுழற்சி’ மந்தநிலையை சந்தித்து வருகிறது.
வருடாந்த மொத்த தேசிய உற்பத்தியில் தனி நபர் நுகர்வு 55-60 சதவிகிதமாகும். இது நடப்பு நிதியாண்டில் 3.1 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. நிலை மூலதன மொத்த உருவாக்கம் (ஜி.எஃப்.சி.எஃப்), 2011 ஆம் ஆண்டில் 34.3 சதவீதத்திலிருந்து 2018 இல் 28.8 சதவீதமாகக் குறைந்தது. இருப்பினும், முதலீட்டாளர்கள் இந்திய பொருளாதாரத்தின் நீண்டகால எதிர்காலம் குறித்து நேர்மறையான எண்ணத்தில் உள்ளனர், ஏனெனில் இந்த பத்தாண்டின் தொடக்க காலத்தில் அதாவது 2011 ஆம் ஆண்டுடன் தற்காலத்தை ஒப்பிடும்போது தற்போது புதிதாக தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது . தொழில்களில் முதலீடும் முன்பை விட அதிகமாக உள்ளது.
தொழில் முன்னேற்றம் குறித்த ஆலோசனை நிறுவனமான EY இன் ஆய்வுத் தகவல் படி, நடப்பு 2019 முதல் அரை ஆண்டில் மட்டும் 536 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய முதலீட்டு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 43 சதவீதம் அதிகம் ஆகும். இந்த 536 ஒப்பந்தங்கள் மூலம் மொத்த முதலீட்டுத்தொகை 23.4 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது, இது கடந்த ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெற்ற முதலீட்டை விட 27 சதவீதம் அதிகம் ஆகும் .
EY இன் ஆய்வுத்தகவல் படி "2019 ஆம் ஆண்டின் உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து தனியார் ஈக்விட்டி முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய உள்கட்டமைப்பு தொழில்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் முன்னிலை வகித்துள்ளன" என்று EY இன் பங்குதாரரும் தேசிய தலைவருமான விவேக் சோனி கூறினார்.
மிக அதிக அளவிலான இந்த முதலீட்டின் எழுச்சிக்குக் காரணம் இந்திய பொருளாதாரத்தின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்துள்ள மிகப் பெரிய நம்பிக்கையை காட்டுகிறது. அவர்கள் தற்காலிக சுணக்கத்தை பொருள்படுத்தாமல் நீண்டகால அளவில் இந்திய தொழில் துறைகளில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.