பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய, முத்தலாக் வழக்கின் முக்கிய மனுதாரர் இஷ்ரத் ஜஹான்!!

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய, முத்தலாக் வழக்கின் முக்கிய மனுதாரர் இஷ்ரத் ஜஹான்!!

Update: 2019-08-16 07:56 GMT
முத்தலாக் வழக்கின் முக்கிய மனுதாரரான, இஷ்ரத் ஜஹான், பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு தேசிய கொடி வண்ணத்தில் ராக்கி கட்டினார்.
அப்போது முத்தலாக் விவாகரத்து முறையை நீக்கியதற்காக முஸ்லிம் பெண்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம், ஹவுராவை சேர்ந்த இஷ்ரத்துக்கு 14 வயது மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகள் உள்ளன.
கடந்த 2014-ஆம் ஆண்டு இவரது கணவர், துபாயில் இருந்தபடி தொலைபேசி வாயிலாக முத்தலாக் கூறி, இஷ்ரத்தை விவாகரத்து செய்தார்.
இதையடுத்து முத்தலாக் கொடுமையை எதிர்த்து, போராட்டங்களை துவக்கிய இஷ்ரத், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.
மோடி அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடைச்சட்டத்தின் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடைத்துள்ளது.

Similar News