நாட்டை காக்கும் காவல் சாமிகளை கையில் தாங்கும் பா.ஜ.க அரசு - இராணுவ வீரர்களுக்கு நான்கு மடங்காக உயர்த்தப்பட்ட நிதி உதவி!

நாட்டை காக்கும் காவல் சாமிகளை கையில் தாங்கும் பா.ஜ.க அரசு - இராணுவ வீரர்களுக்கு நான்கு மடங்காக உயர்த்தப்பட்ட நிதி உதவி!

Update: 2019-10-08 12:05 GMT

இராணுவ வீரர்கள் நலனில் அக்கறை செலுத்துவதில் பாஜக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மீண்டும் அதுபோல ஒரு தாக்குதல் நடத்துவிடக் கூடாது என்ற நோக்கில், காஷ்மீர் விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்தது.


முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில், வெறும் வாய் பேச்சாக இருந்த குண்டு துளைக்காத ஆடைகள் இன்றைக்கு சாத்தியமாகியுள்ளது. மேலும் பல நவீன தொழில்நுட்பங்களை இராணுவத்தில் உட்புகுத்தி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் விடாப்பிடியாக நிற்கிறது.


களத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ஏதாவது என்றால், இரண்டு லட்சமாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 25 இலட்சம் முதல் 75 இலட்சம் வரை இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு, எதிர்பாரா சம்பவங்களின் போது கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இன்று விமானப்படை தினத்தை முன்னிட்டு, விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.


விமானப்படை தினமான இன்று, பெருமைமிகு இந்த தேசம் நமது விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தனது நன்றியை உரித்தாக்குகிறது. இந்திய விமானப்படை தொடர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடனும், சிறந்த திறமையுடனும் நாட்டிற்காக பணியாற்றும்” என்று பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1181384564364718088

Similar News