முகமது மன்சூர் கான் ரூ.2,000 கோடி மோசடி! சிக்குகிறார் கர்நாடகா முன்னாள் முதல்வர்!

முகமது மன்சூர் கான் ரூ.2,000 கோடி மோசடி! சிக்குகிறார் கர்நாடகா முன்னாள் முதல்வர்!

Update: 2019-08-26 02:17 GMT

பெங்களூரு, சிவாஜி நகரை தலைமையிடமாக வைத்து இயங்கி வந்துள்ளது, ஐ.எம்.ஏ., குழும நிதி நிறுவனம் இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம், பணம் பெற்று, மோசடி செய்துள்ளது. இந்த மோசடியில் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது . இந்த மோசடியில், ஐ.எம்.ஏ., குழும நிறுவனர், முகமது மன்சூர் கான், 57, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்த வழக்கு விசாரணையை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவிடம், கர்நாடகா அரசு ஒப்படைத்திருந்தது. முதலீட்டாளர்கள் சிலர், இவ்வழக்கில், மாநில அதிகாரிகள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளதால், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இவ்வழக்கு, கடந்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கர்நாடகா அரசு, ஏற்கனவே இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றிஉள்ளதாக அறிவித்தது. செப்., 9க்குள், பூர்வாங்க விசாரணையை முடித்து, முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை, சி.பி.ஐ.,யிடம், எஸ்.ஐ.டி., ஒப்படைத்தது. அதில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் உடைய விசாரணை அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.


அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: முன்னாள் முதல்வர் ஒருவர், 2018-ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், 25 கோடி ரூபாய் கேட்டதாகவும், முதல்கட்டமாக, 5 கோடி ரூபாய், மூன்று நபர்கள் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.


சி.பி.ஐ., விசாரணையில், பெரும்பாலான தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக, முன்னாள் முதல்வருக்கு பணம் கைமாறியது உண்மை என, தெரியவந்துள்ளது.இந்த மோசடி தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவனத்துக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பு உள்ள சொத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Similar News