சாலையோரம் அனாதையாக திரிந்த மூதாட்டி பாத்திமாவை, கணவர் அகமதுவுடன் சேர்த்து வைத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் !

சாலையோரம் அனாதையாக திரிந்த மூதாட்டி பாத்திமாவை, கணவர் அகமதுவுடன் சேர்த்து வைத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் !

Update: 2019-11-25 09:39 GMT

கன்னியாகுமரி மாவட்டம் தோட்டிகோடு பகுதியில் 85 வயது மதிக்கத்தக்க
ஒரு மூதாட்டி கடந்த சில நாட்களாக அனாதையாக திரிந்தார். இதுபற்றி தகவல் தெரிந்ததும்
ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான, சேவாபாரதியை சேர்ந்த நிர்வாகி பொன்குமார்,
அதொட்டிகோடுக்கு விரைந்து சென்று  அந்த மூதாட்டியை
மீட்டார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள சேவாபாரதியின் “அபய கேந்திரம்” முதியோர் இல்லத்திற்கு
அந்த மூதாட்டியை அழைத்து சென்று பராமரித்து வந்தனர்.


அந்த மூதாட்டியிடம் விசாரித்தபோது, அவரது பெரியார் பாத்திமா
என்று தெரியவந்தது. அவர் கன்னியாகுமரி மாவட்டம் இளங்கடை பகுதியை சேர்ந்தவர்
என்பதையும் தெரித்துள்ளார்.


இதனைத்தொடர்ந்து மூதாட்டி பாத்திமா தொடர்பான தகவல்களை சேவாபாரதி
அமைப்பினர் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியீட்டனர். பாத்திமாவின் உறவினர்கள், தொடர்பு
கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் அறிவித்து இருந்தனர்.


இதன் பயனாக மூதாட்டி பாத்திமாவின் கணவர் அகமது, கவனத்திற்கு
இந்த செய்தி சென்று சேர்ந்தது. மனைவி பாத்திமாவை காணாமல் தவித்த அகமது உடனே நாகர்கோவிலில் உள்ள அபயகேந்திரத்திற்கு சென்றார். அங்கு தனது மனைவி பாத்திமாவை சந்தித்தார். பின்னர், அகமதுவிடம் மூதாட்டி பாத்திமாவை
சேவாபாரதி நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர்.


ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பான சேவாபாரதி நிர்வாகிகளுக்கு மூதாட்டி
பாத்திமாவின் கணவர் அகமது நன்றி தெரிவித்துக்கொண்டார்.


ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும்
எதிரானவர்கள் போன்ற தவறான பிரச்சாரத்தை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். ஆனால்
உண்மையில் ஆர்எஸ்எஸ் அப்படி அல்ல என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு
உணர்த்தி உள்ளது.


Similar News