அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் ஆர்.எஸ்.எஸ் வெற்றி விழா கொண்டாடாது! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் ஆர்.எஸ்.எஸ் வெற்றி விழா கொண்டாடாது! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Update: 2019-11-02 11:29 GMT

அயோத்தி ராம் ஜன்மபூமி நில விவகாரம் தொடர்பாக விரைவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவுள்ளது. நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த இந்த தீர்ப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அதே சமயம் மிகவும் உணர்வு பூர்வமான பிரச்சினை என்பதால் சுமூகமான விளைவுகள் ஏற்பட வேண்டும் என நீதிமன்றம், மத்திய அரசு, இந்து அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் உட்பட அனைவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.  


இந்த நிலையில் அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் ஆர்எஸ்எஸ் வெற்றி விழா கொண்டாடாது என்றும், எந்த ஒன்றிலும் வெற்றியை பறை சாற்றி விழா கொண்டாடுவது ஆர்.எஸ்.எஸ்.சின் வரலாற்றில் வழக்கமல்ல என்றும், சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு 370 பிரிவு அந்தஸ்து நீக்கப்பட்டதை கூட ஆர்.எஸ்.எஸ். கொண்டாடவில்லை என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகி அதிகாரபூர்வமாக கூறியதாக இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.


ஆர்.எஸ்.எஸ்.போலவே விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அந்த தீர்ப்பை இந்துக்களின் வெற்றியாகவோ அல்லது முஸ்லிம்களின் தோல்வியாகவோ சித்தரிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளவும் விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது.        


சங்க பரிவாருடன் இணைந்த பல்வேறு அமைப்புகளின் இரண்டு நாள் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி இந்த முடிவை எடுத்தன. இந்த முடிவு இந்துக்களுக்கு சாதகமாக வந்தால், ராமர் கோயிலின் கட்டுமானம் 2020 ஜனவரிமாதத்தில் தொடங்கப்படலாம் என்று சங்க பரிவாரின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Translated Article From SWARAJYA


Similar News