தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தேர்வான மாவட்டம் எது.? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பு.!
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தேர்வான மாவட்டம் எது.? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பு.!
தமிழக அரசினால் சிறந்த மாநகராட்சிகளுக்கு வழங்கப்படும் விருதுக்காக சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மிகச்சிந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு கடந்த 2012 முதல் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிறந்த மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதேபோல் சிறந்த 3 நகராட்சிகளுக்கு தலா 15 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் மற்றும் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பரிசுகளை சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் பழனிசாமி வழங்க உள்ளார்.
அதன்படி இந்த வருடத்தின் சிறந்த மாநகராட்சிக்கான விருது சேலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகள் முறையே தருமபுரி, வேதாரண்யம். அறந்தாங்கி நகராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது.