சானிட்டரி நாப்கின் விலை இனி ஒரு ரூபாய் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் !
சானிட்டரி நாப்கின் விலை இனி ஒரு ரூபாய் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் !
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்கள் நலனில் தனி முக்கியதுவம் கொடுத்து வருகிறது.அதில் ஒன்றாக பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள, மலிவு விலை மருந்தகங்களில், 1 ரூபாய்க்கு, 'சானிட்டரி நாப்கின்'கள் விற்பனை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர், மான்சுக் மாண்டவியா, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது : பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சில திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
நாடு முழுவதும், மத்திய அரசால், 'ஜன் அவுஷாதி' எனப்படும், மலிவு விலை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மருந்தகங்களில், மிக குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஒரு சானிட்டரி நாப்கின், 2.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி, மலிவு விலை மருந்து கடைகளில், இது, 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
நான்கு நாப்கின்கள் அடங்கிய பாக்கெட், தற்போது, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; இனி, 4 ரூபாய்க்கு விற்கப்படும். கடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும், வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றில், இதுவும் அடக்கம். என கூறினார்.