30 நிமிடம் 80-களுக்கு தூக்கி செல்லும் சந்தானம் - இரட்டை ஹீரோயின்களுடன் நகைச்சுவை, காதல் அரட்டை பறக்க வெளியாகும் ஆக்சன் திரைப்படம்!
30 நிமிடம் 80-களுக்கு தூக்கி செல்லும் சந்தானம் - இரட்டை ஹீரோயின்களுடன் நகைச்சுவை, காதல் அரட்டை பறக்க வெளியாகும் ஆக்சன் திரைப்படம்!
இயக்குனர் கண்ணனின் மசாலா பிக்ஸ் உடன் இணைந்து எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் தாரா அலிஷா பெர்ரி நாயகியாக நடிக்கிறார்.
மற்றொரு நாயகியாக சுவாதி முப்பாலா நடிக்க, ஆனந்த்ராஜ், சவுகார் ஜானகி, 'மொட்ட' ராஜேந்திரன், சிவசங்கர், 'லொள்ளு சபா' மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ரதன் இசை அமைக்கிறார், சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்றது. நகைச்சுவை, காதல், ஆக்ஷன் என முழு மசாலாவாக படம் தயாராகி உள்ளது.
படத்தில் 30 நிமிட காட்சி 80களில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. இதற்காக ஐதராபாத்தில் 80 லட்சம் செலவில் அரங்கம் அமைக்கப்பட்டது. 15 நாட்கள் படப்பிடிப்பு இதில் நடைபெற்றது. இத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்தது.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையிலும் இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. 2020 பிப்ரவரி மாதம் வெளியாவதற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.