மஹாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைப்பதுதான் ஜனநாயகத்துக்கு அழகு: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து
மஹாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைப்பதுதான் ஜனநாயகத்துக்கு அழகு: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து
மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைப்பதுதான் ஜனநாயகம் என்றும் தற்போது பாஜக ஆட்சியமைத்திருப்பதை வரவேற்பதாகவும் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் பிரபல நடிகருமான ஆர். சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சிவசேனா காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை அமைக்க முயன்றபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். மக்கள் பாஜக – சிவசேனா வுக்குதான் வாக்களித்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. தற்போது அங்கு அதிக வாக்குகள் மற்றும் இடங்கள் பெற்ற தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைப்பதை வரவேற்கிறேன். பாஜகவுக்கு எனது இனிய வாழ்த்துக்கள் என்றார் சரத் குமார்.