மத்திய அரசின் குறு-சிறு, நடுத்தர தொழில்களுக்கான மானிய உதவி - ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு உதவும் டிஜிட்டல் முயற்சி!

மத்திய அரசின் குறு-சிறு, நடுத்தர தொழில்களுக்கான மானிய உதவி - ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு உதவும் டிஜிட்டல் முயற்சி!

Update: 2019-11-19 13:24 GMT

தகுதிவாய்ந்த குறு-சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தங்களது உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் கிளவுட் கம்பியூட்டிங் மூலம் ஐசிடி உபகரணங்கள் மற்றும் பயன்பாடுகளைப் பின்பற்ற ஊக்கமளித்து உதவி செய்வதே டிஜிட்டல் குறு-சிறு, நடுத்தரத் தொழில்கள் திட்டத்தின் நோக்கம். பதிவு செய்யப்பட்ட அனைத்து குறு-சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் இதற்கு தகுதி பெற்றவை.


ஈஆர்பி, கணக்கியல், உற்பத்தி வடிவமைப்பு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டுப்பாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக இணையவழித் தளம் ஒன்று அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு, குறு-சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.


தகுதிவாய்ந்த உத்யோக் ஆதார் ஆவணத்தைப் பெற்றுள்ள, பதிவு செய்யப்பட்ட அனைத்து குறு-சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இந்த சலுகைகளை பெற, www.dcmsme.gov.in என்ற இணைய தளம் அல்லது MY MSME செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


கூடுதல் விவரங்கள் மற்றும் நிதியுதவி பெற, இயக்குநர் குறு-சிறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம், 65/1, ஜிஎஸ்டி சாலை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியிலோ dcdi-chennai@dcmsme.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 044 22501011/12/13 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என குறு-சிறு, நடுத்தரத் தொழில் துறை சென்னை மண்டல இயக்குநர் அறிவித்துள்ளார்.


Similar News