காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஜரூர் ! எதையும் சமாளிப்போம் !!

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஜரூர் ! எதையும் சமாளிப்போம் !!

Update: 2019-08-06 10:01 GMT

காஷ்மீர் நிலவரம் குறித்து ஸ்ரீநகரில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் வடக்கு பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஆலோசனை நடத்தினார்.


நேற்று நாடாளுமன்றத்தில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானம் மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா ஆகியவை நிறைவேறியது. மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானம் மற்றும் காஷ்மீர் மறுவரையறை மசோதாவை அமித்ஷா மக்களவையிலும் இன்று தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம்  நடைபெற்று வருகிறது. 
இதற்கிடையே, வடக்கு பகுதி தலைமை தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் தலைமையில் அதிரடி நடவடிக்கைக்கு தயாராவது பற்றிய ஆய்வு கூட்டம் ஸ்ரீநகரில் கூடியது. இந்த கூட்டத்தில் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின்  முக்கிய குழுக்களை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.


ஆலோசனை கூட்டத்திற்கு பின் ரன்பீர் சிங் கூறுகையில், அமைதி மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம், இபோதையவரை மாநிலத்தில் எந்த அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நன்றாக உள்ளது. என்றாலும் எதையும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம்  என கூறியுள்ளார். 


Similar News