மோடி, அமித்ஷாவின் கைகளில் முன்பைவிட நாடு அதிகபட்ச பாதுகாப்பில் உள்ளது!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் புகழாரம்

மோடி, அமித்ஷாவின் கைகளில் முன்பைவிட நாடு அதிகபட்ச பாதுகாப்பில் உள்ளது!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் புகழாரம்

Update: 2019-10-08 12:01 GMT


விஜயதசமி விழா இந்தியா முழுவதும் மட்டுமன்றி உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் கடந்த 2 நாட்களாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக எச்சிஎல் நிறுவன அதிபர் ஷிவ் நாடார் பங்கேற்றார். நிகழ்ச்சியின்போது போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசியதாவது:-


உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இந்த ஜனநாயகம் இந்தியாவுக்கு திடு திப்பென்று வந்ததல்ல. எங்கிருந்தும் பெறப்பட்டதுமல்ல. பல நூற்றாண்டுகளாக நமது வாழ்வியல் நடைமுறைகளில் உள்ள பாரம்பரியம்தான் இன்றைய ஜனநாயகம். இந்தியாவில் 2019 தேர்தல்கள் சுமூகமாக நடத்தப்படுமா என்பது குறித்து உலக நாடுகள் நம்மை வியப்புடன் பார்த்தன. ஆனால் மிக அமைதியாக நடைபெற்றதுமல்லாமல் அனைவரும் அதிக அளவில் எதிர்பார்த்த மோடியே மீண்டும் வெற்றி பெற்றார்.


பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் திட்டமிட்ட, சாதுர்ய முயற்சிகளால் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மிகவும் பாராட்டுக்கு உரியதாகும். எல்லைப்பகுதியில் முன்பு இருந்ததை விட தற்போது அதிகப் படியான பாதுகாப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.  


இந்திய கடலோரப் பகுதிகள் முழுவதின் மீதும் அதிக கவனத்தை செலுத்தும் வேளையில் தேச எல்லைப்புரங்களிலும், நமக்கு சொந்தமான தீவுப்பகுதிகளிலும் நாம் அதிகப்படியான கண்காணிப்பை தீவிரமாக செலுத்த வேண்டும். அதே சமயம் ஆங்கிலேயர்கள் மற்றும் இதர நாட்டவர்கள் நம் நாட்டில் அமல்படுத்திய  à®…டிமைமுறையை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையை ஒழிக்க அரசு முன் வரவேண்டும் என்றும் கூறினார்.


மேலும் நமக்கு உலக அளவில் பெருமைகளை சேர்க்கும் விஞ்ஞானிகளை புகழ்ந்தார். நாடு அனைத்து துறைகளிலும் வெற்றி பெறவும், தனது இலட்சியங்களை அடையவும் அரசு மட்டும் அக்கறை எடுத்துக் கொண்டால் போதாது. மக்களுக்கும் பங்குண்டு என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்


.https://www.opindia.com/2019/10/rss-foundation-day-here-are-the-major-takeaways-from-mohan-bhagwats-address-on-vijayadashami/


Similar News