முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தஞ்சை பெரிய கோவிலில் 4 அடுக்கு பாதுகாப்பு.!
முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தஞ்சை பெரிய கோவிலில் 4 அடுக்கு பாதுகாப்பு.!
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தஞ்சை பெரியகோவிலுக்கு நான்கடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் முழுமையான சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டம் முழுவதும் எந்தவிதமான ஆர்பாட்டங்கள் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.