“பாகிஸ்தானிடம் இருந்து பிரித்து தனி நாடாக ஆக்குங்கள்” - இந்தியாவிடம் பலுசிஸ்தான் மக்கள் குமுறல்!!

“பாகிஸ்தானிடம் இருந்து பிரித்து தனி நாடாக ஆக்குங்கள்” - இந்தியாவிடம் பலுசிஸ்தான் மக்கள் குமுறல்!!

Update: 2019-08-16 08:07 GMT
“பாகிஸ்தானிடம் சிக்கி நாங்கள் சீரழிகிறோம், இந்தியா எங்களுக்கு சுதந்திரம் வாங்கி தர வேண்டும்” பலுசிஸ்தான் மக்கள் கோரிக்கை!!

'பாகிஸ்தானிலிருந்து, பலுசிஸ்தான் பகுதி சுதந்திரம் பெறுவது பற்றி, சர்வதேச அளவில், இந்தியா குரல் எழுப் வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள  பலுசிஸ்தான் மாகாணம் இயற்கை வளமிக்க பகுதி. இந்த பகுதி, பாகிஸ்தானுடன் இணைக்கப்ட்டதை, ஆரம்பத்திலிருந்தே அப்பகுதி மக்கள் விரும்பவில்லை. கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றனர். இதுதவிர பலுசிஸ்தான் மக்கள் மீது பாகிஸ்தான், தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் அந்த மக்கள் பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானை பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பலுசிஸ்தான் மக்கள், பாகிஸ்தானில் தாங்கள் படும் துன்பங்கள் பற்றியும், தங்கள் சுதந்திரம் பற்றியும், இந்தியா, சர்வதேச அளவில், குரல் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலுசிஸ்தானை சேர்ந்த அட்டா பலோக் கூறுகையில், “சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்தியா மாபெரும் வளர்ச்சி பெற்றள்ளது. இன்று, உலகம் முழுவதும் இந்தியா பெரிதும் மதிக்கப்படுகிறது. எங்களுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தானில் நாங்கள் அடிமைகள் போல் நடத்தப்படுகிறோம். பாகிஸ்தானிடம் இருந்து எங்களுக்கு இந்தியா சுதந்திரம் வாங்கித்தர வேண்டும். இதுதொடர்பாக சர்வதேச அளவில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும். ஜெய்ஹிந்த்” என்றார்.
பலுசிஸ்தானை சேர்ந்த அஷ்ரப் ஷெர்ஜான் கூறுகையில், “எங்கள் பிரச்னையை, ஐ.நா. சபை உட்பட சர்வதேச அரங்குகளில், இந்தியா கொண்டு செல்ல வேண்டும். பாகிஸ்தான் கையில் சிக்கி பலுசிஸ்தான் சீரழிகிறது. எனவே பலுசிஸ்தானை தனி நாடாக்க வேண்டும்” என்றார்.

Similar News