சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனி சட்டம் ! கம்யூனிஸ்டுகளை கலங்க வைத்த மத்திய அமைச்சர் திரு.சதானந்த கவுடா.!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனி சட்டம் ! கம்யூனிஸ்டுகளை கலங்க வைத்த மத்திய அமைச்சர் திரு.சதானந்த கவுடா.!

Update: 2019-10-10 10:16 GMT

கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது . இந்த தீர்ப்புக்கு எதிராக சபரிமலையில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது.


பெரியார் கொள்கை உடைய பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முற்பட்டனர். மாறு வேடம் அணிந்து கோவில்லுகள் இரு பெண்கள் நுழைந்தனர். இவர்கள் இடது சாரி பெண்கள் ஆவார் சபரிமலை ஐயப்பன் கோவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மாரு பரிசீலனை செய்வதற்கு சீராய்வு மனுக்‍கள் தாக்கல் செய்யப்பட்டது இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.


இந்நிலையில் , கேரள மாநிலதிற்கு சென்ற மத்திய அமைச்சர் திரு சதானந்த கவுடா காசர்கோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் பேசிய மத்திய அமைச்சரும், பாரதிய ஜம்மு காஷ்மீரில் ,சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய சட்டம் இயற்றியது.


அதன் பின் சட்ட பிரிவு நீக்கப்பட்டது. அதே போன்று சபரிமலை விவகாரத்திலும் சட்டம் இயற்றுவது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. சட்டம் இயற்றுவதற்கு துரித நடவடிக்‍கைகள் எடுக்‍கப்படும் எனவும், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்த பிறகு சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கை மேகொள்வோம் என மத்திய அமைச்சர் திரு.சதானந்த கவுடா கூறினார்.


Similar News