காஷ்மீரில் மீண்டும் போராட வருமாறு பிரிவினைவாதிகள் அழைப்பு !! பந்தோபஸ்து படைகள் குவிப்பு!!

காஷ்மீரில் மீண்டும் போராட வருமாறு பிரிவினைவாதிகள் அழைப்பு !! பந்தோபஸ்து படைகள் குவிப்பு!!

Update: 2019-08-23 07:15 GMT

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு போராட்டம் நடத்த திரண்டு வருமாறு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளதால் காஷ்மீரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.


ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகளும், தொழுகையை வழி நடத்தும் இமாம்களும் போராட்டம் நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். 
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து பல்வேறு இடங்களில் பதாகைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக, ஸ்ரீநகரில் உள்ள  ஐநா ராணுவ கண்காணிப்பு அலுவலகத்தை நோக்கி மக்கள் பேரணியாக செல்ல வேண்டும் என்று பிரிவினைவாதிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்துள்ள போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகள் லால் சவுக் மற்றும் சோனவர் பகுதியை நோக்கி பேரணி நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Similar News