ப.சிதம்பரம், டி.கே.சிவகுமாரை தொடர்ந்து சரத்பவார் கைதாகிறார்! ரூ.25,000 கோடி ஊழலில் அமலாக்கதுறை நடவடிக்கை!!
ப.சிதம்பரம், டி.கே.சிவகுமாரை தொடர்ந்து சரத்பவார் கைதாகிறார்! ரூ.25,000 கோடி ஊழலில் அமலாக்கதுறை நடவடிக்கை!!
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவரும் மத்தியபிரதேச முதல்வருமான கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி, 354 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினருக்கு 317 வங்கிக் கணக்குகளும், அதில் பல கோடி ரூபாய் பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் காங்கிரசின் மிக நெருக்கமானவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் அடுத்து ஜெயிலுக்குப் போகும் நிலையில் உள்ளார்.
இவரது மருமகனும், மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார், மராட்டிய மாநில கூட்டுறவு வங்கி இயக்குனராக இருந்தபோது, அங்கு உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு முறைகேடாக கடன் வழங்கிய வகையில் 25,000 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த மெகா மோசடியில் சரத்பவாருக்கு தொடர்பு உள்ளதை அமலாக்கதுறை கண்டுபிடித்து. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சரத்பவாருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனால், சரத்பவார் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று தெரிகிறது.