சிவசேனாவுடன் கை கோர்க்கும் எண்ணத்தை கை விட்டது தேசியவாத காங்கிரஸ் ! விரைவில் முடிவுக்கு வரும் குழப்பங்கள்

சிவசேனாவுடன் கை கோர்க்கும் எண்ணத்தை கை விட்டது தேசியவாத காங்கிரஸ் ! விரைவில் முடிவுக்கு வரும் குழப்பங்கள்

Update: 2019-11-06 10:55 GMT


சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தன்னை சந்தித்த அடுத்த சில மணி நேரங்களில் சிவசேனைக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளததை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் விரைவில் அகன்று, மீண்டும் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி ஏற்படுவதுதான் ஒரே வழி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


288 தொகுதிகளை உடைய மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனா். சிவசேனைக்கு 56 எம்எல்ஏக்கள் உள்ளனா். தோ்தலின்போது இந்த இரு கட்சிகளும் கூட்டணியாகப் போட்டியிட்டன. ஆனால், இப்போது, பாஜக ஆட்சி அமைக்க சிவசேனை ஆதரவு தர மறுத்து வருகிறது. முதல்வா் பதவி தங்களுக்கு வேண்டும் என்பதில் அக்கட்சி பிடிவாதமாக உள்ளது.


ஆனால், பாஜக அதனை ஏற்க மறுத்து வருவதால், மகாராஷ்டிரத்தில் இப்போது வரை ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருவரும் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.


இதனிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்காது. தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே செயல்படும். மக்கள் வாக்களித்துள்ளதால் பாஜகவும், சிவசேனை சேர்ந்து விரைவில் ஆட்சியமைக்க வேண்டும் என்றார்.


சரத்பவாரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்டிருக்கும் குளறுபடி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Similar News