சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் மகள் கைதாகிறார்!!
சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் மகள் கைதாகிறார்!!
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவகுமார், பண மோசடி மற்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டு அமலாக்க துறை விசாரணையில் உள்ளார்.
இவர், 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை முறைகேடாக குவித்து உ்ளளார். இது தவிர, அவரது மகள் ஐஸ்வர்யா பெயரிலும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். மேலும், கோடிக்கணக்கான பணத்தை பல்வேறு இனங்களில் முதலீடுகளும் செய்துள்ளார்.
இதனைத்தெரிந்துகொண்ட அமலாக்கதுறை அதிகாரிகள், ஐஸ்வர்யாவையும் விசாரிக்க முடிவு செய்தனர். அவரை நாளை (12-ஆம் தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன அனுப்பி உள்ளனர். பெங்களூரு சதாசிவம் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சம்மனை நேரில் அளித்தனர்.
விசாரணையின்போது, அவர் முறைகேடாக சொத்து குவித்தது மற்றும் பல்வேறு இனங்களில் முதலீடு செய்தது போன்றவைகளுக்கு முறையான ஆவணங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே விசாரணையைத் தொடர்ந்து ஐஸ்வர்யா, கைது செய்யப்படுவார் என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.