புளுகுமூட்டை தி.மு.க அடிமை SKP கருணாவின் மற்றுமொரு அண்டப்புளுகு!
சதாசர்வகாலமும் இணையத்தில் பொய் தகவல்களை பரப்புவதையே வேலையாக கொண்டுள்ள சர்ச்சைக்குரியவர் தி.மு.க பிரமுகர் SKP கருணா.
பொய் சொன்னால் கூட பொருந்த சொல்ல வேண்டும் என்று கூறுவதுண்டு. சதாசர்வகாலமும் இணையத்தில் பொய் தகவல்களை பரப்புவதையே வேலையாக கொண்டுள்ள சர்ச்சைக்குரியவர் தி.மு.க பிரமுகர் SKP கருணா.
பல முறை டுவிட்டரில் பொய் தகவல்களை பதிர்ந்து இருக்கும் இவர், எவ்வளவு முறை மூக்குடைக்கப்பட்டாலும் தன் குணாதியசத்தை மாற்றுவதாக இல்லை. தி.மு.க பிரமுகர் என்பதால் பொய்யும் புரட்டும் கூறுவது இவரது இரத்தத்தில் ஊரியுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.
சர்வசாதரணமாக இணையத்தில் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு செய்வதில் துச்சமும் தயக்கமின்றி நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று வாழ்ந்து வரும் SKP கருணா-வின் மற்றொரு பொய்யை வெட்ட வெளிச்சமாக தோலுறித்து காட்டியிருந்தோம்.
தற்போது அடுத்த பொய்யை கட்டவிழ்த்துள்ளார். 12 மே, 2018 அன்று இவர் பதிந்துள்ள ஒரு டுவிட்டர் சுட்டியில் இவ்வாறு கூறுகிறார்.
"மனைவியுடன் வடநாட்டுச் சுற்றுலா சென்றுள்ள நண்பன் அங்கிருந்து அழைத்தான். ஒரு மாநிலத்திலும் கூட கிரெடிட் கார்ட் வாங்கறதில்லையாம்! ஒரே ஒரு ஏடிஎம் இல் கூட பணம் இல்லையாம். செத்துப் பிழைச்சு ஊர் திரும்புறேன் என்றான். #NewIndiaBorn #DigitalIndia #ModiSarkar"
அதாவது வட மாநிலத்தில் எங்கேயும் கிரெடிட் கார்டுகள் வாங்கவில்லையாம். ஒரு ஏடிஎம்-ல் கூட பணமில்லையாம். பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏடிஎம்-களும் லட்சக்கணக்கான கடைகளிலும் கார்டுகள் வாங்கப்படவில்லையாம். இந்த புளுகு சுட்டியில் இருந்து இவர் #DigitalIndia மீதும் பிரதமர் மோடி மீதும் இருக்கும் வெறுப்பை கட்டவிழ்த்து விடவே இந்த பொய்யை கூறுகிறார் என்பதில் சந்தேகம் ஒன்றும் வேண்டாம்.