சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும்! - அரசுத்துறை நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு!!
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும்! - அரசுத்துறை நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு!!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய மாநில அரசு துறைகளுக்கு, சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்கியுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தது. அதில் இதுவரை 40 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 20 ஆயிரம் கோடி ரூபாயை அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று அனைத்து மத்திய மாநில அரசுத் துறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இதனால் இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும், அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
This is a Translated Articles From TIMES OF INDIA