எஸ்.பி.ஜி பாதுகாப்பு இனி பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமருக்கு மட்டும்தான் - அமித்ஷா!
எஸ்.பி.ஜி பாதுகாப்பு இனி பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமருக்கு மட்டும்தான் - அமித்ஷா!
SPG என அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு இனி பிரதமருக்கு மற்றும் முன்னாள் பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவருடைய மகன் ராகுல் காந்தி மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புப் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது, Z+பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் சிறப்பு பாதுகாப்பு படை திரும்பப் பெறப்பட்டது நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர் ,வெளிநடப்பு செய்து வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்,திமுகவை சேர்ந்த டிஆர் பாலு சோனியாவுக்கு சிறப்பு படை பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது எதிர்ப்பும் தெரிவித்தார் சோனியாவுக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் சிறப்பு பாதுகாப்பு குழு திருத்த மசோதா நேற்று அறிமுகம் செய்யப்பட்டு இன்று விவாதம் நடைபெற்ற விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படஉள்ளது என்ற சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு பிரதமர் மற்றும் அவரது இல்லத்தில் அதிகாரப்பூர்வ முறையில் அவருடன் வசித்து வரும் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் கூறினார்.
அதேபோன்று முன்னாள் பிரதமர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே ஐந்து ஆண்டு அதிகாரப்பூர்வமாக இல்லத்தில் அரசு ஒதுக்கீட்டு செய்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும்தான் 5 ஆண்டு வரை சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.