டி20 தொடரில் பாகிஸ்தானை வாஷ் அவுட் செய்த இலங்கை!!

டி20 தொடரில் பாகிஸ்தானை வாஷ் அவுட் செய்த இலங்கை!!

Update: 2019-10-11 06:11 GMT

கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி தொடரை 3-0 என வென்றது.
இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று இருக்கிறது. அங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது. அடுத்து நடந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்றது.


டி20 தொடரில் நடந்த முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது.
லாகூரில் நேற்றிரவு நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது.


பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்று 3-0 என கணக்கில் பாகிஸ்தானை வாஷ் அவுட் செய்தது.


Similar News