பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் தொடரை விளையாட மறுத்த இலங்கை அணி வீரர்கள்!!

பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் தொடரை விளையாட மறுத்த இலங்கை அணி வீரர்கள்!!

Update: 2019-09-10 06:31 GMT

இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந் தேதி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 20ஓவர் போட்டியில் விளையாடவுள்ளனர் . இப்போட்டி அக்டோபர் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது .


இந்த நிலையில் பாகிஸ்தான் தொடருக்கான போட்டியில் விளையாட விரும்பவில்லை என்று இலங்கை 20 ஓவர் அணியின் கேப்டன் மலிங்கா, மேத்யூஸ், திசரா பெரேரா உள்பட 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துஉள்ளனர்.


இதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது தெரியவில்லை. 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். அதன் பிறகு பாதுகாப்பு கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றனர்.


Similar News