இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை அதிபர்!

இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை அதிபர்!

Update: 2019-11-20 06:41 GMT

இலங்கையின் 8வதுஅதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்,இதற்கு நன்றி தெரிவித்துள்ள கோத்தபய ராஜபக்சே இரு நாடுகளும் வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன,எனத் தெரிவித்துள்ள கோத்தபய ராஜபக்சே  நட்பை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் உங்களை சந்திக்கவும் நான் எதிர்நோக்குகிறேன்,என்று அவரது ட்விட்டர் தெரிவித்திருந்தார்.


இலங்கை புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபயா ராஜபக்ச, தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வரும் 29ம் தேதி வருகை தரவுள்ளார்.கோத்தபயாவை,  கொழும்புவில் இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பிரதமர் மோடியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஜெய்சங்கர் அளித்தார்.


அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே, இந்தியாவுக்கு வரும் 29ம் தேதி வருகை தர உள்ளார்,இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.


Similar News