ஹெச். ராஜா இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் , இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சந்திப்பு

ஹெச். ராஜா இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் , இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சந்திப்பு

Update: 2019-11-25 05:16 GMT

பா.ஜ., தேசிய பொதுச் செயலர் ஹெச்.ராஜா. இவரது மகள் சிந்துஜா - -சூர்யா திருமணம், இம்மாதம் 15ம் தேதி, காரைக்குடியில் நடந்தது. நேற்று, சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் பன்னீர்செல்வம் மணமக்களை வாழ்த்தினர் மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மூத்த தலைவர்கள் இல.கணேசன், சுப்பிரமணியசாமி, வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.



மேலும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், த.மா.கா., தலைவர் வாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி, நடிகர் ரஜினிகாந்த், நடிகை கவுதமி மற்றும் பல பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தினர். அப்போது வரவேற்பு நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிறுவனர் மற்றும் தலைவர் ராமகோபாலன் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்கள் ராமகோபாலன் சந்தித்து பேசினார்.


Similar News