திருவள்ளுவரை, பெரியார் என கூறி ஸ்டாலின் மீண்டும் உளறியதை கேட்டு தி.மு.க வினர் அதிர்ச்சி, நெட்டிசன்கள் கலாய்!
திருவள்ளுவரை, பெரியார் என கூறி ஸ்டாலின் மீண்டும் உளறியதை கேட்டு தி.மு.க வினர் அதிர்ச்சி, நெட்டிசன்கள் கலாய்!
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். திருவள்ளுவரை, பெரியார் என கூறி ஸ்டாலின் மீண்டும் உளறியதை கேட்டு அங்கிருந்த தி.மு.க., வினர் அதிர்ச்சி அடைந்தாலும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல் நின்றனர். யாரும் அதை திருத்துவதற்கும் முயற்சிக்கவில்லை.
புதுக்கோட்டை , விராச்சிலை தி.மு.க பிரமுகர் இல்ல திருமண விழாவில் நேற்று கலந்து கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது, பெண்ணின் மாமனாரை (காசி விஸ்வநாதன்) மணமகன் என அழைத்ததால், திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் திடுக்கிட்டனர். சில நொடிகளில் அதை திருத்தி கொண்டு, சுப்பிரமணியன் என மணமகன் பெயரை கூறி சமாளித்தார்
புதுக்கோட்டை தி.மு.க இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் உளறியதே இன்னும் ஆறாத நிலையில் இன்று திருவள்ளுவர் பெரியார் என்று சொல்லியிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.