துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியாது-பாகிஸ்தானுக்கு தி.மு.க ஆதரவு அளிப்பது வெட்கக்கேடு !
துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியாது-பாகிஸ்தானுக்கு தி.மு.க ஆதரவு அளிப்பது வெட்கக்கேடு !
செய்தியார்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியாது. தலைவர் பதவிக்கு அவர் தகுதி இல்லாதவர்.ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் மூன்றாவது கட்சியாக உள்ள தி.மு.க. குரல் எழுப்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என பாகிஸ்தான் ரேடியோவில் ஒளிபரப்புகின்றனர். இதை விட வெட்கி தலைகுனியும் விஷயம் வேறு இருக்க இயலாது.
'ஐ.என்.எக்ஸ். மீடியா 2ஜி ஸ்பெக்ட்ரம்' என்ற இரண்டு வழக்குகளால் இந்தியா முழுவதும் தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வே காரணம்.
முன்னாள் அமைச்சர் சிதம்பரம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை முன் ஆஜராகி இருக்கலாம். ஆஜராகாததால் சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதிக்கும் நிலை ஏற்பட்டது.
பயங்கரவாதிகள் ஊடுருவல் தகவலால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகப் போலீசார் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறனை பெற்றுள்ளனர். காவல் துறை உஷாராக உள்ளது.
என்னை 'ஜோக்கர்' எனக் கூறியுள்ளார். ஜோக்கர் இல்லை என்றால் சீட்டாட்டம்கிடையாது; அரசியல் ஆட்டமும் கிடையாது.
என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.