உச்சகட்டம்: ஸ்டாலின் இப்படி ஒரு புத்திசாலியா? என்ன பேசி வெச்சிருக்காரு பாருங்க!

உச்சகட்டம்: ஸ்டாலின் இப்படி ஒரு புத்திசாலியா? என்ன பேசி வெச்சிருக்காரு பாருங்க!

Update: 2019-10-17 13:44 GMT

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதால்தான், மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் வந்த போது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் வந்தார்கள்" என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.


வெளிநாட்டு தலைவர்கள் வரும் போது, பாதுகாப்பு அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்வார்கள் என்கிற சாதாரண பொது அறிவு கூட இல்லாமல் "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லாததால் தான் சீனாவில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் வந்தார்கள்" என்று பேசியிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்.




https://twitter.com/ThanthiTV/status/1184151087441252352?s=20


சட்டம் ஒழுங்கு சரியாக இல்லாத பகுதிகளுக்கு முக்கியமான நாடுகளின் அதிபர்கள் செல்லவே மாட்டார்கள். மாறாக, சட்டம் ஒழுங்கு சரியாக உள்ள பகுதிகளில் தான் உலக நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு நடக்கும்.


சீன அதிபர் என்று கிடையாது, வேறு எந்த ஒரு நாட்டிலிருந்து தலைவர்கள் வேறு ஒரு நாட்டுக்கு பயணம் செய்தாலும் தங்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளை உடன் அழைத்துச் செல்வார்கள். அதுவும், அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் என்றால் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு, பாதுகாப்பு அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் சென்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, தொடர்பாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுடன், தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்வது வழக்கம்.


வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூர் வந்த போது, ஏராளமான பாதுகாப்பு அதிகாரிகள், குண்டு துளைக்காத கார்கள், கூடவே சொந்த கழிவறையை கூட வடகொரியாவில் இருந்து கொண்டு வந்தார்கள். அதனால் சிங்கப்பூரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வாரா மு.க. ஸ்டாலின்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் பசுமை தாயகம் அமைப்பினர்.


Similar News