“ஸ்டாலின், எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்? அந்த மர்மத்தை விளக்குவாரா?” - ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெத்தியடி கேள்வி!!
“ஸ்டாலின், எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்? அந்த மர்மத்தை விளக்குவாரா?” - ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெத்தியடி கேள்வி!!
தமிழக சுகாதாரத்துறையை மேம்படுத்தவும், மின்துறை, தொழில்துறை ஆகியவற்றில் முதலீட்டை ஈர்க்கவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காகச தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளுக்கு பேட்டியளித்தார். அப்போத அவர் கூறியதாவது:-
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும், பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் ஆகிய நோக்கங்களுக்காகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளேன்.
வெளிநாட்டில் உள்ள தொழில்துறை முன்னேற்றங்களைப் பார்வையிடுவதுடன், தொழில் அதிபர்களை நேரில் சந்தித்துத் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளேன்.
ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்? அவரும் சொன்னதில்லை. நீங்களும் அவரிடம் கேட்டதில்லை. அவர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்ற மர்மத்தை விளக்குவாரா?
தமிழகத்தின் வளர்ச்சிக்காக நான் வெளிநாட்டுப் பயணம் செல்வதை அவர் கொச்சைப்படுத்தி வருகிறார்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.