“வீட்டு வேலைக்காரன் பெயரில் ரூ.700 கோடி கட்டடத்தை லஞ்சமாக பெற்றனர்” - ஸ்டாலின் குடும்பத்தின் பித்தலாட்டம் அம்பலம்!!
“வீட்டு வேலைக்காரன் பெயரில் ரூ.700 கோடி கட்டடத்தை லஞ்சமாக பெற்றனர்” - ஸ்டாலின் குடும்பத்தின் பித்தலாட்டம் அம்பலம்!!
“வீட்டு வேலைக்காரன் பெயரில் ரூ.700 கோடி கட்டடத்தை லஞ்சமாக பெற்றனர்” என்று அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான “நமது அம்மா” செய்தி வெளியிட்டு உள்ளது.
கடந்த 23.09.2019 அன்று வெளியான இதழில், “புரட்டுக்காரனுக்கு புத்தி இருட்டின் மீது அல்லவா?” என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாக உள்ளது. அந்த கட்டுரை அப்படியே இங்கே:-
புரட்டுக்காரனுக்கு புத்தி
இருட்டின் மீது அல்லவா?
அந்நிய முதலீட்டை வைத்து அவதூறு பரப்புகிறதே புரட்டொலி.
என்ன செய்வது திருட்டுத் தனங்களின் பார்வையெல்லாம் இருட்டை நோக்கித் தானே இருக்கும். இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரிப்பும், பொருளாதார தடையும் வேண்டும் என தமிழக சட்டசபையில் கழகம் இயற்றிய தீர்மானத்தை ஆதரிப்பதாக பகல் வேசம் போட்டுவிட்டு, அதே இன அழைப்பு இலங்கையில் இருபத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை சிங்கப்பூர் கம்பெனி மூலமாக முதலீடு செய்த இனத்துரோக திருட்டு கும்பலுக்கு பார்ப்பதெல்லாமும் பழுதாகத்தானே தோன்றும்.
அலைக்கற்றை எனப்படும் தேசத்தின் பாதுகாப்பு தொடர்புடைய ஸ்பெக்டரத்தை டாடாவுக்கு ஒதுக்க அவர்களில் 700 கோடி ரூபாய் மதிப்புடைய வோல்டாஸ் கட்டடத்தையே தங்கள் வீட்டு வேலைக்காரன் பெயரில் லஞ்சமாக எழுதி வாங்கிக் கொண்டவர்கள்... அதுபோலவே பாகிஸ்தான் தொடர்புடைய பால்வாவிடம் 214 கோடி ரூபாயை அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு கையூட்டாக வாங்கி கருணாநிதி பெயரிலேயே தொலைக்காட்சி தொடங்கி விட்டு விவகாரம் வெளிப்பட்டு விட்டதும் சி.பி.ஐ விசாரணைக்கு போய் வந்த அப்பாவி இளைஞன் பெரம்பலூர் சாதிக்கை பரலோகம் அனுப்பி வைத்த பாதகர்களின் புத்தி பார்ப்பதில் எல்லாம் பழுதாகத்தானே இருக்கும்.