பீகாரில் அருண் ஜெட்லிக்கு சிலை! நிதிஷ் குமார் முடிவு!!

பீகாரில் அருண் ஜெட்லிக்கு சிலை! நிதிஷ் குமார் முடிவு!!

Update: 2019-08-31 11:05 GMT


முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24-ஆம் தேதி டெல்லி எய்ம்ச் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். 


இந்நிலையில், மத்திய முன்னாள் நிதி மந்திரி மறைந்த அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பீகார் மாநிலத்தில் சிலை அமைக்கப்படும். மேலும், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


Similar News