ஜே.என்.யு விவகாரம் களத்தில் குதித்த சுப்பிரமணிய சுவாமி! நேதாஜி பெயரை பல்கலைக்கழகத்துக்கு வையுங்கள்!
ஜே.என்.யு விவகாரம் களத்தில் குதித்த சுப்பிரமணிய சுவாமி! நேதாஜி பெயரை பல்கலைக்கழகத்துக்கு வையுங்கள்!
கடந்த 2016 ஆம் ஆண்டுநாடாளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த அஃப்சல் குருவுக்கு கைது செய்யப்பட்டு அவனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. இந்த மரண தண்டனைக்கு எதிராக ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அவ்வபோது பிரச்சனைகள் நடந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் விடுதி மற்றும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும்ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தார்கள். அது திசை மாறி தேசத்திற்கு எதிராக வாசகங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில முஸ்லீம் அமைப்புகள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து அங்கு காவல்துறை குவிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பை உறுதிசெய்து வருகிறது.
இவ்வாறு நிலைமை அங்கு இருக்க புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி அளித்தார். பேட்டியில் ஜவஹர்லால் நேரு பேரில் இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே ஜே.என்.யு பெயரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைகழகம் என மாற்ற வேண்டும். இது மாணவர்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல் பல்கலைக்கழகத்தில் சமூக விரோதிகளை அகற்ற ஜே.என்.யு பல்கலைக்கழகத்தை 2 ஆண்டுகள் மூட வேண்டும். என பேசியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன