டெனிம் ஜீன்ஸ் வெறும் ஆடை அல்ல எமோசன். டெனிம் நிறுவனம் உருவான வெற்றிகதை

டெனிம் ஜீன்ஸ் வெறும் ஆடை அல்ல எமோசன். டெனிம் நிறுவனம் உருவான வெற்றிகதை

Update: 2020-04-07 02:28 GMT

டெனிம் ஜீன்ஸ்" - ஆடை என்ற வார்த்தையையும் தாண்டி இதன் தாக்கம் உலகெங்கும் பரவியுள்ளது. குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பெரும் நட்சத்திரங்கள் துவங்கி பாமரர்கள் வரை அனைவராலும் நேசிக்கப்படும் உடை. அந்த உடைக்கு வரலாற்று பெருமையை சேர்த்தவர் லெவி ஸ்ட்ராஸ். அவரால் உருவாக்கப்பட்டது தான் டெனிம்.

புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிக்கை "டெனிம்" ஜீன்ஸ்க்கு கொடுத்த புகழாரம் இது "உலகின் பழமைவாய்ந்த ஆடை டெனிம் ஜீன்ஸ் ஆனாலும் இன்றளவும் காலத்திற்க்கு ஏற்றாவாறு தன்னை இளமையாகவே வைத்திருக்கிறது" டெனிம் ஜீன்ஸின் வெற்றி ரகசியமும் அதுவே.....பழமை வாய்ந்த ஒரு சிந்தனை, கருத்துருவாக்கமாக இருந்தாலும், உலகத்தினரால் போதுமானவரை பயன்படுத்தப்பட்டு விட்டாலும், இன்றளவும் தன் இடத்தை விட்டுகொடுத்ததே இல்லை டெனிம் ஜீன்ஸ். அதன் காரணம் காலத்திற்க்கு ஏற்றாவாறு தன்னை புதுப்பித்து வருவதே..

டெனிம் ஜீன்ஸ் பற்றிய சுவரஸ்யமான குறிப்புகள் இதோ........

1. 18ஆம் நூற்றாண்டு தொழிலாளர்களால் தான் டெனிம் ஜீன்ஸ் முதன் முறையாக அணியப்பட்டது. அன்றைய காலத்திலேயே இதை அணிந்தவர்களின் துணி அலமாரியிலும், மனதிலும் நீங்கா இடம் பிடித்தது டெனிம் காரணம் இதனுடைய நீண்ட ஆயுளும் உழைப்பும்.

2. இதை உருவாக்கிய லெவி ஸ்ட்ராஸ், துவக்க காலத்தில் இந்த வகை துணியை, கூடாரம் அமைக்கவும், சரக்கு வண்டிகளுக்கு உரை செய்து போடுவதற்கும் சுரங்க தொழிலாளிகளுக்கு அவர் விற்க .இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

3. இரண்டாம் உலக போரின் பொழுது, ஓய்வு நேரங்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்த ஜீன்ஸை தான் அணிந்தார்களாம். இந்த நிகழ்வே டெனிம் ஜீன்ஸை உலகிற்க்கு அறிமுகப்படுத்தியது.

4. ஆங்கிலத்தில பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் சிலவற்றால் ஜீன்ஸ் என்ற உடை இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

5. "இண்டிகோ டை" என்ற சாயம் தான், துவக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டது. காரணம் ஜீன்ஸ்க்கே உரிய தனித்துவம் வாய்ந்த அந்த நீல நிறத்தை பெறுவதற்க்கும், ஜீன்ஸினை துவைக்காமல் வைத்தாலும் அதன் மேல் படியும் அழுக்கை வெளியே காட்டாமல் இருப்பதற்க்கும்(!)

6. மே மாதம் 20 ஆம் தேதி - இந்நாளை ஜீன்ஸ் உடையின் பிறந்த தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். காரணம் அன்று தான் இதை உருவாக்கிய லெவி ஸ்ட்ராஸ் இவ்வுடைக்கான பாட்டண்ட் (patent) உரிமத்தை பதிவு செய்தார்.

7. ஒரு கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவில் ஒரு நபரிடம் 7 ஜோடி ஜீன்ஸ் இருப்பதாகவும். வருடத்திற்க்கு 450 மில்லியன் ஜோடி ஜீன்ஸ்கள் அமெரிக்காவில் வாங்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

8. 225 ஜோடி ஜீன்ஸ்களை தயாரிக்க ஒரு பெரும் மூட்டை பருத்தி தேவைப்படுகிறது....

9. துவக்க காலத்தில் சுரங்க தொழிலாளர்கள், விவசாயிகள், சாலைகள் போடுவபவர்கள், இரயில்வே ஊழியர்கள் என அதீதமாக உழைக்ககூடிய துறையுடனும் தான் டெனிம் ஜீன்ஸ் தன்னுடைய வியாபரத்தை நடத்தி வந்துள்ளது. 

Similar News