சுஜித் வில்சன் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வட்டாட்சியரிடம் கோரிக்கை !

சுஜித் வில்சன் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வட்டாட்சியரிடம் கோரிக்கை !

Update: 2019-11-02 03:33 GMT

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுத்து உயிரிழத்த சிறுவன் சுஜிர்த்தின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாராயண சாமி நாயுடு விவசாய சங்கம் மனு அளித்துள்ளனர்.


இது குறித்து விவசாய சங்கத்தின் தலைவர் பாபு கூறியதாவது ஆழ்துளை கிணற்றில் விழுத்து சிறுவன் சுர்ஜித் வில்சன் உயிரிழந்தது தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது சுர்ஜித்தை எப்படியும் உயிருடன் மீட்க தமிழக அரசு முழு மூச்சாக களப்பணி ஆற்றியது.இதற்காக தமிழக அரசிற்கும் முதல்வர்,துணைமுதல்வர் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றி .


தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து அதை மூடாமல் இருந்தது தான் சிறுவன் உயிர் இழப்பிற்கு காரணம் அவரது பெற்றோர்கள் தான் எனவே சுர்ஜித் வில்சன் பெற்றோர் மீது மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாக கூறினார்.


Similar News