சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்!!

Update: 2019-10-11 10:09 GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. அந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது . சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் சிவா, ரஜினி இல்லம் சென்று அவரை சந்தித்து இந்த படத்தை பற்றி பேசியதாகவும் செய்திகள் வெளிவந்தன.


இதனையடுத்து ரஜினி, சிவா இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும் இந்த படத்தை கோலிவுட்டின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்து வந்தன


தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படம் ரஜினியின் 168 -வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.


சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ரஜினிகாந்த் மூன்றவது முறை இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News