இடைத்தேர்தலில் அ.தி.மு.க விற்கு ஆதரவு ! அறிவிப்பை வெளியிட்டார் பொன்.இராதாகிருஷ்ணன்!

இடைத்தேர்தலில் அ.தி.மு.க விற்கு ஆதரவு ! அறிவிப்பை வெளியிட்டார் பொன்.இராதாகிருஷ்ணன்!

Update: 2019-10-04 11:42 GMT

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயதிற்கு சென்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, சந்தித்தார். இச்சந்திப்பின் போது மூத்த தலைவர் இல.கணேசன் மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன் மற்றும் பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன்,கருப்பு முருகானந்தம், துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், பொருளாளர் S .R சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.சந்திப்பின் போது நாங்கு நேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவை கோரினார். அமைச்சர் ஜெயக்குமார்.






இந்த சந்திப்பின் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.இராதாகிருஷ்ணன் தற்போது தமிழக பா.ஜ.க விற்கு தலைவர்நியமிக்கததால் தேசிய தலைமையிடம் அ.தி.மு.க ஏற்கனவே ஆதரவு கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ,தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இன்று என்னை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார்.நடைபெறவிருக்கும் நாங்குநேரி,மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பாரதிய ஜனதா ஆதரவு அளிக்கும்.


அ.தி.மு.க வின் வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உழைப்பார்கள். மேலும் பிரச்சாரம் மேற்கொள்ளும் பா.ஜ.க.வின் நிர்வாகிகள் பட்டியல் விரைவில் முறைப்படி வெளியிடப்படும். இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க அ.தி.மு.க வுடன் இணைந்து பா.ஜ.க செயல்படும். அ.தி.மு.க, பா.ஜ.க இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறினார்.


Similar News