ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

Update: 2019-08-26 07:43 GMT


ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சி.பி.ஐ விசாரணையில் உள்ளார்.


இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வேண்டும் என்று ப.சிதம்பரத்தின் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 20-ஆம் தேதி அந்த பனு தள்ளுபடி செய்யப்பட்டது.


இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தலைமறைவானார். பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ஆம்   தேதி கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவரது விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. 


இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டு தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. 


அப்போது, ப.சிதம்பரத்தை சிபிஐ ஏற்கனவே கைது செய்திருப்பதால், முன்ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.


Similar News