சுஷ்மா ஸ்வராஜ் மறைவு: பா.ஜ.க மூத்த தலைவர் L.K.அத்வானி இரங்கல்!
சுஷ்மா ஸ்வராஜ் மறைவு: பா.ஜ.க மூத்த தலைவர் L.K.அத்வானி இரங்கல்!
பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), மறைவுக்கு மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
அவரது மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேசம் ஒரு குறிப்பிடத்தக்க தலைவரை இழந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை, இது ஈடுசெய்ய முடியாத இழப்பு, சுஷ்மாஜியின் இருப்பை நான் பெரிதும் இழந்துள்ளேன். அவளுடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.
சுஷ்மா சுவராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி. என தெரிவித்துள்ளார்.