இந்தியர்களின் கறுப்பு பண பட்டியல் வெளியிடும் சுவிஸ்! அரசியல் தலைவர்கள் கிலி!

இந்தியர்களின் கறுப்பு பண பட்டியல் வெளியிடும் சுவிஸ்! அரசியல் தலைவர்கள் கிலி!

Update: 2019-09-01 03:21 GMT

சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசியக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை அந்நாடு இன்று முதல் இந்தியாவுக்கு வழங்குகிறது.இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், இந்தியர்களின் ரகசிய வங்கிக் கணக்கு விவரங்கள் கிடைக்கவுள்ளன. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருந்து அதை 2018-ஆம் ஆண்டு மூடிய இந்தியர்களின் கணக்குகள் தொடர்பான தகவல்களும் அதில் அடங்கும்.


மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசியக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அந்த நாடு இந்தியாவிடம் வழங்குகிறது. அந்தத் தகவல்கள் மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.


ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்போரின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. முறைகேடாக சம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் பலரும் பதுக்குகின்றனர். நம் நாட்டை சேர்ந்த அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் பலரும் அங்கு கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.


இதைத் தொடர்ந்து மத்திய அரசின் நேர்முக வரிகள் வாரியத்தின் அதிகாரிகள் சுவிட்சர்லாந்து அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். இதன் அடிப்படையில் தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிட சுவிஸ் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.


இதையடுத்து மத்திய நேர்முக வரிகள் வாரிய அதிகாரிகளிடம் சுவிஸ் வங்கி அதிகாரிகள் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பற்றிய பட்டியலை இன்று ஒப்படைக்கவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


Similar News