குரங்கு கையில் சிக்கிய பூமாலையான ஆப்கானிஸ்தான் - தலை துண்டித்து, நாக்கு அறுத்து துடிதுடிக்க கொலை செய்யப்பட்ட வீராங்கனை!
Taliban militants behead volleyball player who was part of Afghan women's national team
ஆப்கானில் பெண் வீராங்கனை தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.
இந்த நிலையில் 90களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். குறிப்பாக தலீபான்கள் ஆப்கானை கைப்பற்றியதும் அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். ஆனால் 2 வீரர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற முடிந்தது.
இந்த நிலையில், ஆப்கானின் தேசிய பெண்கள் வாலிபால் குழுவினை சேர்ந்த Mahjubin Hakimi என்ற பெண் வீராங்கனை கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வாலிபால் குழுவின் பயிற்சியாளர் அளித்த பேட்டியில், " Mahjubin Hakimiதலிபான்களால் தலை துண்டித்தும் நாக்கு அறுத்தபடியும் துடிதுடிக்க கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து வெளியில் எதுவும் சொல்லக் கூடாது என்று Mahjubin Hakimi-ன் பெற்றோரை தலீபான்கள் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் பெண் வீரங்கனையின் தலை துண்டிக்கப்பட்ட படத்தை தலீபான்கள் வெளியிட்டனர்.