ஸ்டாலின் அ.தி.மு.க. வை கரப்ஷன், கமிஷன், கலெக்சன், என சொல்கிறார் அதை தொடங்கி வைத்த புண்ணியவான் நீங்கள் தானே என்று சாடினார்-தமிழருவி மணியன்
ஸ்டாலின் அ.தி.மு.க. வை கரப்ஷன், கமிஷன், கலெக்சன், என சொல்கிறார் அதை தொடங்கி வைத்த புண்ணியவான் நீங்கள் தானே என்று சாடினார்-தமிழருவி மணியன்
திருச்சியில் துக்ளக்கின் 50ஆவது ஆண்டு பொன் விழாவில் தமிழருவி மணியன், பாண்டே ,துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கலந்து கொண்டு பேசினார் அப்போது பேசிய தமிழருவி மணியன்எடப்பாடி அரசு கரப்ஷன், கமிஷன், கலெக்சன்,என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அதை சொல்வதற்கு நீங்கள் என்ன காமராஜர்,இந்த மண்ணில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து ஊழல்களுக்கும் உற்சகம் நடத்திய மனிதர்களை நீங்கள் தானே, ஏன் உங்களால் ஒரு எடப்பாடியை கூட அசைக்க முடியவில்லை,நீங்கள் சட்ட மன்றத்திற்கு சென்று எடப்பாடியின் முன் நின்று நீங்கள் ஊழல் செய்து இருக்கிறீர்கள் என்று சொன்னாள், நீங்கள் செய்யாத கூறலாம் என்று அவர் கேட்பார்,நீங்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் செய்யாத அதிகார துஷ்பிரயோகம் என்று அவர் சொல்லுவார்,நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு நாயகர்களை நீங்கள் தானே,நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் வரை எடப்பாடி அவர்கள் சுகமாக ஆட்சி நடத்துவார்,என்று பேசினார்.
மேலும் என் உயிர் பிரிவதற்கு தமிழ்நாட்டிலிருந்து திராவிடக் கட்சிகள் தூக்கி எறியப்பட வேண்டும் என தெரிவித்த அவர், சீன அதிபரை வரவேற்ற போது பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்த போது அவரின் எதிர்ப்பு ஓரளவு குறைந்து விட்டதாக அவர் பேசினார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அவர் சொன்னபோது பரவாயில்லையே என மக்கள் சொல்கிறார்கள்,இங்குள்ள 10 அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு விட்டு இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அவர் பேசினார்.