கவர்ச்சி காட்டாததால் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது!! தவித்துப் புலம்பும் .. தமன்னா !!
கவர்ச்சி காட்டாததால் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது!! தவித்துப் புலம்பும் .. தமன்னா !!
நடிகை தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்பொழுது அவருக்கு 29 வயது ஆகிறது. பட வாய்ப்புகள் பற்றி அவர் கூறுகையில், “நான் ஆண்டுக்கு 4, 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. மற்றவர்கள்போல் அதிகம் படங்கள் உங்களுக்கு இல்லையே? ஏன்? என்று கேட்கிறார்கள். நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நிறைய நடித்துவிட்டேன். இனி அதுபோல் நடிக்க வேண்டாம் என்று தோன்றியது.
“அந்த காரணத்தினால்தான் எனது படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மாப்பிளை வேட்டையில் மும்முரம்
“உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர். எனது அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதனால் மாப்பிள்ளை தேடும் வேட்டையில் அவர் மும்முரமாக இருக்கிறார்,” என்று கூறினார் தமன்னா .