பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியின் ரயில் நிலையத்தில் தமிழ் மொழி !
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியின் ரயில் நிலையத்தில் தமிழ் மொழி !
ஹிந்துக்களின் புனித ஸ்தலம் வாரணாசி. வருடந்தோறும் இந்தியாவின் அணைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். இந்தியாவின் தென் மாநிலங்களை சேர்ந்த பலர் வாரணாசிக்கு வருகின்றனர். வாரணாசி முழுவதும் ஹிந்தி மொழி வழக்கத்தில் உள்ளதால், பக்தர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர். மத்திய அரசு இதை கருத்தில் கொண்டு, பக்தர்களுக்கு உதவும் வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை வாரணாசி முழுவதும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக, வாரணாசி ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் தமிழில் மேற்கொள்ளப்படும். படி படியாக பெயர் பலகைகள், வீதி பெயர் பலகைகள், அறிவிப்பு பலகைகள் ஆகியவற்றில் தமிழ் இடம் பெரும். பக்தர்களுக்கு உதவும் வகையில் தமிழ் மொழியில் உதவும் மையம் அமைக்கப்படும். அறிவிப்புகளை தமிழில் தொலைக்காட்சியின் மூலம் பக்தர்களுக்கு கொண்டுசெல்லப்படும். இந்த முயற்சி இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த முயற்சி பிரதமரின் தொகுதியான வாரணாசியிலிருந்து, அதுவும் பிரதமரின் அலுவலகம் அறிவுறுத்தலின் பெயரில் வருவது மிகவும் பாராட்டத்தக்கது.